நூல் வகை : ஹைக்கூ கவிதைகள்
தலைப்பு : பிடிமண்
ஆசிரியர் : கம்பம் ரவி
முதல் பதிப்பு : 2011
பதிப்பு : நிழல்கள் வெளியீடு, 14, புதிய பேருந்து நிலையம், கம்பம். 625516.
பக்கங்கள் : 64
விலை : ரூ. 30/
நூல் வகை : ஹைக்கூ கவிதைகள்
தலைப்பு : பிடிமண்
ஆசிரியர் : கம்பம் ரவி
முதல் பதிப்பு : 2011
பதிப்பு : நிழல்கள் வெளியீடு, 14, புதிய பேருந்து நிலையம், கம்பம். 625516.
பக்கங்கள் : 64
விலை : ரூ. 30/
ஷி. ஹேமா வெங்கடேஷ், சேலம்.
ஹைக்கூ சிறுவயதில் நான் பார்த்து வியந்த ஒரு கவிதை வடிவம். ஹைக்கூ ஜப்பானியக் கவிதை வடிவம் என்பதை வேறு எதுவும் தெரியாது. அதற்கென்று இலக்கணம் இருக்கிறது என்பதும், அதற்கென்று சில வரிவடிவங்கள் இருக்கிறது என்பதும் இப்புத்தகம் வாசிக்கத் தொடங்கியபோது தான் தெரிந்துகொண்டேன்.
வெளிப்படையாக உணர்ச்சிகளை காட்டாமல், வாசிக்கும் வாசகனின் கற்பனைக்கே விட்டுவிடுதல் தனிச்சிறப்பு. புதுக்கவிதை போல சுருக்கமாக இருந்தாலும், நச்சென்று வாசகனின் எண்ண அலைகளை தட்டி எழுப்பக் கூடியது. அப்படியான உணர்வினை கம்பம் ரவி அவர்களின் ஹைக்கூ கவிதைகள் என்னுள் கொடுத்திருக்கிறது. எனக்கு பிடித்த சில கவிதைகள்.
சுகமான
விபத்து !
காதல்!
தமிழ்நாட்டில்
சூடுபிடித்தது
தண்ணீர் வியாபாரம்.
இலவச தொலைக்காட்சியில்
கேட்ட முதல் செய்தி
விலைவாசி உயர்வு!
ஜோதிட க்காரன் சீட்டில்
இல்லவே இல்லை..
கிளியின் எதிர்காலம்
வசப்பட மறுக்கிறது
வாஸ்து சரியில்லாத
மனது!
குறைந்த விலையில
மாப்பிள்ளை
நிறைந்த வயதுடன்.
அழகு பார்க்கிறதா
ஆழம் பார்க்கிறதா
கிணற்றுக்குள் சூரியகதிர்
இலையுதிர் காலத்தில்
மரக் கிளைகளுக்கு ஆறுதல்
பச்சைக்கிளிகள்!
ஊசித்துளையில்
நூல்
கவனத்தின் வெற்றி!
சில கவிதைகள் ஆழமாக இல்லாததை போல் தோன்றியது. அதனால் சரியாக உள்வாங்க முடிய வில்லை. சில கவிதைகளில் முரண்கள் இருந்ததாகத் தோன்றியது. மொத்தத்தில் மிகச்சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்.வெகுநாட்கள் கழித்து அழகிய ஹைக்கூ கவிதைகளை வாசிக்க வைத்த கவிஞர் அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும். நன்றி.
வி. க. சீ. கோமதி
ஈரோடு
அகவிழி – இலக்கியச் சந்திப்பு : 23
ஹைக்கூ கவிதை நூல் விமர்சனம்: பிடி மண்
ஆசிரியர்: கம்பம் ரவி
ஹைக்கூ கவிதைகள் எளிதாக பல பக்கங்களில் கிடைக்கும் தகவல்களை உள்ளடக்கி உள்ளது இதன் தனிச்சிறப்பு. கவிதைகளை படித்து புரிந்துகொள்ள சற்று கூடுதலான நேரம் எடுக்கும் என்ற காரணத்தினால் கவிதை நூல்கள் வாசிப்பதில் தயக்கம் ஏற்படும். இது போன்ற கவிதை நூல் வாசிக்கும் போது விருப்பமுடையவர்கள் ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கும். தமிழ் மொழியை கற்று புரிந்துகொண்ட சிறு வயதினர் முதல் அனைவரும் படிக்க முடியும்.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை இல்லாதவர்களுக்கும் கவிதை எழுதுவது சிரமம் இல்லை என்பதை பிடி மண் ஹைக்கூ கவிதை நூல் வாசிப்பின் வழியாக புரிந்து கொள்ளலாம். ஹைக்கூ கவிதை எழுதுவது மூலம் கற்பனைத்திறன் மேலும் வளரும். மூன்று வரிகளில் சுருக்கமாக தெளிவாக எதுவாக இருந்தாலும் கூறிவிட முடியும் . கவிதை எழுதுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்ற காரணத்தினால் எழுதாமல் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆர்வம் உள்ள அனைவருமே ஹைக்கூ கவிதை எழுதி பழக முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்த ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. இயற்கை, சமூகம், வாழ்வியல் சார்ந்த அனைத்து வகையான தகவல்களையும் ஒரே நூல் வழியாக பல்வேறு வகையான தகவல்களையும் எழுதிய ஆசிரியருக்கு நன்றி.