நூல் வகை: கட்டுரை
தலைப்பு: ஒரு குச்சி ஒரு வானம்
ஆசிரியர்: முனைவர்.மு.அப்துல் சமது
முதல் பதிப்பு: 2019
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41.பி, சிட்கோ இஸ்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர்,
சென்னை. 600 050. www.ncbhpublisher.in
பக்கங்கள் : 132
விலை : ரூ. 120/
அங்கயற்கன்னி
வானொலி கேட்டுக்கொண்டிருந்த காலங்களில் அய்யா தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் கேடகாமல் இருந்தது இல்லை. அவ்வளவு பிடிக்கும் அவருடைய பேச்சு. அதறகுப்பின் வானொலி கேடகும் பழக்கம் போனபின் அவருடைய புத்தகத்தை வாங்கிப்படிப்பேன். தோழர் உமர் அய்யாவின் புத்தகத்தை வாசிக்க அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் கட்டுரையே தன்னம்பிக்கை பற்றியது. பார்ன் சுவாலா தன் வாழவாதாரத்திற்காக சிறு குச்சியை மட்டும் வாயில் கவ்விக் கொண்டு 8000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இனபெறுக்கத்தை முடித்து மீண்டும் தன் வாரிசுகளுடன் மீண்டும் 8000 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து தன் இருப்பிடத்தை அடையும் அப்பறவையின் தன்னம்பிக்கைக்கு ஈடாக எதுவுமில்லை..
அதுபோல அக்கியோ மெரிட்டோ. இசை மற்றும் நகைச்சுவை இரண்டும் எப்பேற்பட்ட வல்லமைகளையும் தன்வசம் கவரும் வல்லமை மிக்கவை எனபதை உணர்ந்தேன்.
இன்றைய சூழலுக்கு காரணம் தேசத்தின் சமையற்கட்டு உணர்த்துகிறது.
நானும் சிவனும் ஒரு ஜாதி சாதி வெறி பிடித்த சமுதாயத்திற்கு ஒரு சாட்டையடி. வலி விரும்பு பகவத் அய்யாவின் பேச்சை நினைவுப் படுத்துகிறது. எக்கோ நார்சிஸ் சுகமான காதல் கற்பனை கதை.
நெஞ்சின் நிமிர்வும் தேசப்பரிவும் கட்டுரையில் சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது. ஜப்பானியர்களின் மாண்பும் லைலா மஞ்னுவை கவிஞர் மஞ்னு என்ற துறவி லைலா என்ற இறைவனைத் தேடியலைவதாக கூறுவது சிறந்த கற்பனை.
அதுபோல பண்டைய மக்களிடம் இருந்த மனிதநேயம், வாழ்வு முறை அனைத்தும் இன்று அழிந்து விட்டதை ஆசிரியர் வேதனையுடன் வெளிப்படுத்தும் விதம்..
குழநதை வளர்ப்பு, என்.ஆர் தியாகராஜன் தண்டனையைக்கூட சுகமாக நினைத்தது, மொழியின் அழகை கூறியவிதம், பறவையின் நேசம், அழகான் தேசத்தில் எதிர்கால உலகம் அழிவை சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்கியவிதம் , அடிபட்டு கற்ற அறிவு , நாட்டின் மக்கள் தொகை பாரமல்ல சுகமே என்பது, அகந்தை அழிக்க நான் மறைய கற்க வேண்டும் எனக்கூறிய பாங்கு
எது சுதந்திரம் என மாணவிக்கு விளக்கிய விதம் கற்பித்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் அனைத்தும் அருமை.
ஷைலா பஷீர்
ஒரு குச்சி ஒரு வானம் கதை, மிகவும் எளிமையான எழுத்து நடையில் இருந்தது. பேராசிரியர் sணீனீணீபீ அவர்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு கதையும் ஒரு முத்து போன்று நம் மனதில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
1. வாழ்க்கையில் எப்படி நம் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் நம் தன்மானத்தையும்,ஈகை தன்மையையும் விட்டுக்கொடுக்க கூடாது என்பதனை பாரதியாரின் கதை உணர்த்தியது.
2. ஙிணீக்ஷீஸீ sஷ்ணீறீறீஷீஷ் என்ற அந்த பறவை எத்தனை மயில் தூரம் கடலின் மேல் பறந்து தன் தேவையை நிறைவேற்றி கொள்கிறது.மனிதர்கள் ஆகிய நம் ஒரு சிறு வேலை செய்ய வேண்டும் என்றாலும் எவ்வளவு சவ்கார்யங்களை எதிர்பார்க்கிறோம்…..
இந்த புத்தகத்தை படிதோம் முடித்தோம் என்று இல்லாமல் நம் வாழ்வில் ஒவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த வேண்டும்.
சங்கீதா செல்வகுமார்
ஒரு குச்சி ஒரு வானம் புத்தகம் படித்ததில் நம்மை நாமே உயர்த்தி கொள்வது எப்படி என்ற கருத்தினை கற்று தருகிறது. மக்கள் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்று கற்று தருகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய விஷயங்கள் அறிய முடிந்தது. என்னை மிகவும் கவர்ந்தவை முதல் கட்டுரையும் மாற்று வலியின் முக்கியத் துவமும். நன்றி
ஹபீஸ் முகமது
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக…
உரைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்ட நூல், அதில் ஒவ்வொரு கட்டுரையும் ரத்தின சுருக்கமாகவும் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி யுள்ளது. மிக எளிமையான மொழிநடை எல்லோருக்கும் எளிதில் ஜீரணமாகும் வகையில் உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வள்ளலார் கருத்தை ஏற்க வைத்த செய்கு தம்பி பாவலர், தான் வாங்கிய மூன்று அனாவையும் மாம்பழ வியாபாரியின் பசி போக்க குடுத்த முன்டாசு கவிஞன், ஐயா தியாகி ழிஸிஜி அவர்களின் தியாக வரலாறு போன்ற அரிய தகவல்கள் அறியாதது.
எல்லா கட்டுரைகளையும் படித்தபின் தாங்கள் வலியுறுத்தும் சில விடயங்கள் என எனக்கு புரிந்தது – சுய முன்னேற்றம், மனிதம், சகிப்புத்தன்மை, தியாகம், பன்முகதண்மை
மென்மேலும் உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள். இன்னும் பல நூல்களை உங்களிடம் எதிர்பார்த்தவனாய்…
வி. க. சீ. கோமதி
ஈரோடு
அகவிழி – இலக்கியச் சந்திப்பு : 22
நூல் விமர்சனம்: ஒரு குச்சி ஒரு வானம்
ஆசிரியர்: அப்துல் சமது
ஒரு குச்சி ஒரு வானம் நூலில் இடம்பெற்றுள்ள கருத்துரைகளின் தொகுப்புகள் அனைத்தும் பல்வேறு அருமையான தகவல்களை எளிமையாக சிறுவர்கள் முதல் அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் எழுதியுள்ளார் . வானொலியில் உரைகளை கேட்கும் போது இனிமையாக இருக்கும் இன்னும் சிறிது நேரம் கேட்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். இனிய உரைகளை நூல்வடிவில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நபரின் மனதில் ஏற்படும் பாதிப்பு எவ்வாறு பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து தேவை ஏற்படும் போது நம்மிடம் மாற்றம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்ற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள கிருமி தொற்றுநோய் பாதிப்பு இதற்கு நல்ல உதாரணம் ஆகும். மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கி கிடக்கிறது. இது போன்ற அறிய வேண்டிய முக்கியமான தகவல்கள் இந்த நூலில் உள்ளது.
இதில் வரும் சில உரைகளை படிக்கும் பொழுது அதுதொடர்பான நூல்களை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நூலை பரிசாக வழங்கலாம். இதிலுள்ள நல்ல தகவல்களை குடும்பத்தினர் அனைவரும் படித்து பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளிடமோ அல்லது உறவினர்களிடமோ கதைகள் கேட்பது கற்பனைத்திறனை வளர்க்கும் முக்கிய காரணமாகக் அமைந்துள்ளது. இன்றைய சூழலில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இந்த நூலை வாசிக்க வேண்டியது மிகவும் அவசியமகும். ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே அமைந்த நல்ல உறவு குறித்து நூலாசிரியர் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். தனது ஆசிரியர் செந்தீ நடராசன் அவர்கள் நூல்களை வாங்கி கொடுத்து பேச்சு போட்டியில் கலந்து கொள்ள ஊக்கம் அளித்துள்ளார் அதன் பின்பு தான் பள்ளி பருவத்தில் இருந்து மேலும் நூல் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருந்த ஆசிரியர் மற்றும் மாணவர் உறவை போன்று இன்றைய சூழலில் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே உள்ள உறவை மேன்மை பெற செய்வது நல்லது.
பறவைகள் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு கடந்து வேறு நாட்டிற்கு செல்லும்போது சிறு குச்சியை மட்டுமே பயன்படுத்தி கொண்டு கடல் பகுதியை கடந்து செல்கிறது. தனக்கு உணவு தேவைப்படும் போது அந்த குச்சியை பயன்படுத்தி கடலில் அமர்ந்து இரை தேடி உண்டு செல்கிறது. மனித இனம் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் வாழ்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
குழந்தை வளர்ப்பு, கல்வி, உறவுகள் மேம்படுத்தல், குடும்ப மற்றும் சமூக பொறுப்பை பற்றிய புரிதல் , அவரவர் குடும்ப மற்றும் சமூக கடமைகள் என்ன என்பதை உணர்ந்து செயல்படவும், நற்சிந்தனை கொண்டு வாழவும , பெரியவர்களிடம் மரியாதை செலுத்துதல் , பிற உயிரினங்களுக்கும் சூழலுக்கும் நன்மை செய்வது போன்ற பல்வேறு விசயங்கள் பற்றி படித்து அறிந்து கொள்ளலாம்.
.தன் சிறு வயதில் பாட்டி கூறியதாக நினைவு கூர்ந்து எழுதியுள்ள கதைகள் சிரிப்பை வரவழைக்கும் விதமாக உள்ளது. கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் பற்றிய தகவல்கள் அறிய முடிந்தது. பல்வேறு புத்தகங்களின் வழியாக கிடைக்கும் எண்ணற்ற தகவல்கள் இந்த நூலில் உள்ளது.