நூல் வகை : கட்டுரை
தலைப்பு : மனிதகுல வரலாறு
ஆசிரியர் : எஸ்.ஏ.பெருமாள்
முதல் பதிப்பு : 2001
பதிப்பு : ரெட் ஸ்டார் பப்ளிகேசன்ஸ், 212, வாழவந்தான் தெரு,
ராமமூர்த்தி நகர், புது விளாங்குடி, மதுரை. 625 018.
பக்கங்கள் : 136
விலை : ரூ. 80/
வி.க. சீ. கோமதி
ஈரோடு
அகவிழி இணையவழி இலக்கியச் சந்திப்பு : 28
நூலின் பெயர் : “இருண்டகாலக் கதைகள்” (சிறுகதைகள்)
இதிலுள்ள ஒவ்வொரு கதையுமே தற்பொழுது நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் அரங்கேறி வருவதாக உள்ளது. அனைவருக்கும் பயனளிக்கும் இந்த நூலை வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த இருண்ட காலமும் கடந்து நல்ல காலம் மக்களுக்கு உருவாக வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்த சிறுகதைகள்.
பணிக்கு சென்றவர் வீடு திரும்பாமல் எங்கு சென்றார்கள் என்பதை கண்டறிய முடியாமல் வீட்டில் உள்ள பெண்கள் சந்திக்கும் துன்பங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு வருத்தமளிக்கிறது. உதவி செய்ய சில சமூக அக்கறை கொண்ட அமைப்புகளின் வழியாக முயற்சி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்பவர்களும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை சில கதைகளின் வழியாக புரிந்து கொள்ள முடிந்தது.
எழுத்தாளர் கைது செய்யப்படும்போது அவருக்கு உதவி செய்ய சிலர் காத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் தொழிலாக பார்த்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். எங்கும் எதிலும் சுயநலமே வெளிப்படும் எண்ணத்தை மாற்ற வேண்டியது அவசியம் .
இயற்கையின் சீற்றத்தால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தால் மறுசீரமைக்க முடியாமல் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். உறவுகளுக்கு இடையே அதிக கோப உணர்வுகளால் பகையை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.
நம்மைச்சுற்றி நடப்பதில் எது உண்மை என்று புரிதல் கூட எவருக்கும் கிடைக்காத வண்ணம் செய்திகள் வேறு திசையில் திருப்பப்பட்டு வருவதனால் மக்களுக்கு உண்மை என்பது முழுவதும் மறைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நூல்களை வாசிப்பதனால் மட்டுமே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்மை சம்பவங்களை பற்றி சிறிதளவு புரிதல் ஏற்படும்.
அனைவருக்கும் சமமான சட்டங்கள் நாட்டில் ஏற்படுவது அவசியம். சாதிமத இன வேற்றுமைகள் பார்த்து இயற்றப்படும் சட்டம் சமுதாய வளர்ச்சியை தடை செய்வதாக அமைந்துவிடுகிறது. பிற மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
எழுத்தாளர்கள் சமுதாயத்தில் நடந்து வரும் உண்மை சம்பவங்களை பற்றி எழுதி வெளியிடுவதனால் சந்திக்கும் இடர்பாடுகள் எப்படி இருக்கும் என்பது கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்யும் எழுத்தாளர்களின் சொந்த வாழ்வில் எந்த சிக்கலும் ஏற்படாமல் பொதுமக்கள் பாதுகாப்பது அவசியம் என்று தோன்றுகிறது.
தங்கள் அடிமைகளாக ஒரு இன மக்களை ஊரை விட்டு தள்ளி குடியிருக்க செய்வது பற்றியும் அவர்களுடைய அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள உரிமை அளிக்காமல் அவர்கள் சந்திக்கும் மற்ற இன்னல்களையும் என்ன கதை வழியாக ஆசிரியர் .
காமிய தேசத்தில் ஒரு நாள் என்ற கதையில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை இயந்திரம் போன்று செய்வதால் மக்கள் உடல் மன ரீதியான பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவது பற்றி அறிந்துக்கொள்ள முடியும். வீட்டிலிருந்து வெளியில் கிளம்புவது முதல் ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் பயணிப்பது பதிவு செய்யப்படுவதாக உள்ளது . வரையறுக்கப்பட்ட நேரத்தில் இயந்திரத்தனமாக மனிதர்கள் இயங்க வேண்டும் என்ற வரையறுக்கப்படுகிறது. தங்கள் அடிப்படை சுதந்திரம் எதுவும் இல்லாமல் சட்டங்கள் கால காலத்திற்கு பதவியில் இருப்பவர்கள் தங்கள் வசதிக்காக மாற்றி வருவதையும் இதன் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
இக்காலத்தில் நடந்த சம்பவங்களை எதிர்கால சந்ததியினருக்கு புரிய வைக்கும் வாய்ப்பை ஆசிரியர்கள் உருவாக்கி உள்ளார்கள்.