நூல் வகை : சிறுதைகள்
தலைப்பு : கதையுதிர் காலம்
ஆசிரியர் : இரா.தங்கப்பாண்டியன்
முதல் பதிப்பு : 2019
பதிப்பு : அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி. 604 408. அலைபேசி: 98426 37637
பக்கங்கள் : 112
விலை : ரூ. 80/
நூல் வகை : சிறுதைகள்
தலைப்பு : கதையுதிர் காலம்
ஆசிரியர் : இரா.தங்கப்பாண்டியன்
முதல் பதிப்பு : 2019
பதிப்பு : அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி. 604 408. அலைபேசி: 98426 37637
பக்கங்கள் : 112
விலை : ரூ. 80/
சாய் ஆனந்தி, திருவேற்காடு
14 கதைகளும் ஏதோவொரு வகையில் வாழ்வின், ‘என்றுமே கடந்துவிட முடியாத’ கடந்த கால நினைவுகளை தூசு தட்டி பார்க்கும் அனுபவங்கள்.
ஆசிரியரின் இந்த தொகுப்புக்கான சிந்தனைக்கு தலைவணங்குகிறேன். சிறுகதை தொகுப்புகளின் சிறப்பு என்றுமே ஒரு நூலில் கதைகளை ஊடாட விடுவது. சாதியோ, விலங்குகளோ, போராட் டங்களோ, கணவன் மனைவி பந்தங்களோ, சமையலோ எதோ ஒன்றை சார்ந்து பிண்ண படுகின்றன. இத்தொகுப்பில் ஆசிரியர் எடுத்து கொண்டது கிராமத்து திருவிழாகள் என்று முதலில் எனக்கு பட்டது. பின் கிராமத்து கிழடுபட்ட வர்களாக, கிராமத்தின் நிலமாக, வறுமையாக, இளஞர்களின் இயலாமைகளாக மாறி மாறி ஊகித்துக் கொண்டே நகர்ந்தது என் வாசிப்பு. பிறகு தான் புரிந்தது, பகிர்ந்துக் கொள்ள முடியாது மனதில் புதைந்து கிடக்கும் கதைகள் என்று.
பல நேரங்களில் நம் கதையை கேட்க இங்கே யாருக்கும் அவசியம் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் ராம்மையாவின் பேரன்களுக்கும், தவளவாயன் பேத்திகளுக்கும் அவசியம் ஏற்படு கிறது. ஆனால் இந்த கிழட்டு கதைச்சொல்லி களுக்குத்தான் தயிரியம் வருவதில்லை.
இக்கதைகளுக்கு பின் என் மனம் அசைப் போட்டு கொண்டே இருக்கிறது என்னிடம் இது வரையில் பகிரப்பட்ட கதைகளை. யாருக்கு தெரியும் எதில் எவ்வளவு புதையல் இருக்கிறது என்று.
என் அம்மா சிறுவயதில் எனக்கு சொன்ன கதையில் வரும் அக்கா ரகசியமாய் திருடி சென்றது என் மாமாவின் சண்டைதான் என்று இரு வாரங்களுக்கு முன் தான் அவளிடமிருந்து தந்திரமாக கேட்டறிந்தேன். இந்த தொகுப்பு கற்று தந்த இத்தந்திரம் இன்னும் என்னென்ன உண்மைகளை கட்டவிழ்க்க போகிறதோ.
என் அப்பாவிடம் லேசாக கேட்டேன் உன் லவ் ஸ்டோரி சொல்லுப்பா ன்னு. “அட ப்போமா” என்ற அவரின் முகத்தில் புது ரத்தம் பாய்ந்தது.
எங்கள் வீட்டில் ஒருவரான பாட்டியின் அக்காள் பற்றி ஏதோ ரகசியங்கள் எங்களுக்கு கடத்தபட வில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.
இக்கதைகளை குறைந்தது தினம் ஒருவருக் காவது சொல்லிவிட்டு கதை முடிவில் இருவரும் மௌணம் காத்திருக்கிறோம். குறிப்பாக கதையுதிர் காலம் தாத்தாவின் மனைவி சொல்லிய கதைகளை போல் இன்று மனைவிகளிடம் இருப்பதை. ஆடு மெய்க்கும் ஆற்றுதடங்களையும். அறுபது வயதான மனைவியை இழந்த சின்னகாமன் மீது காமாட்சியின் கரிசணம்.
மனித மனங்களில் புதைத்து வைக்கபட்ட அத்தனை வித்தியாசமான அனுபவங்களை எப்படி இந்த கதாசிரியர்கள் மட்டும் ஊடூரூவி எடுக் கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது.
மனிதம் வளர இது போன்ற தொகுப்புகளை வாசித்து உள் வாங்குவது மிகவும் முக்கியமாக படுகிறது. நம் அருகிலேயே வாழ்ந்து வருபவரையும் ரசிக்க, மகிழ, அவரை மகிழ்விக்க ஒருவருக்கு ஒருவர் காது கொடுத்தாலே போதும். மனிதம் தழைக்கும். வேறென்ன வேண்டும் இங்கே, இப்பொழுது.
ஆசிரியரின் எழுத்துகள் ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் தெளிவாக உணர உதவியது. பெரிதும் அளட்டி கொள்ளாத எளிமை. வாழ்த்துகள்.
தியாகு கண்ணன், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
கதைகள் கேட்டு வளர்ந்த தமிழ் சமூகத்தில் கதைகள் உதிர்ந்து விழும் நிலையை பிரதிபலிக்கிறது கதையுதிர்காலம்.
இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை கதையாக தொகுத்து அளித்த தோழர். இரா. தங்கபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்து களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னகாமு மற்றும் தவளவாயன் கதைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பெண்கள் எப்படி கணவனை தவிர்த்து வேறொரு ஆணிடம் வாழும் நிலை ஏற்படுகிறது என்பதை பதிவு செய்கிறது. இது போன்ற கதைகள், குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சொல்வதற்கு ஏற்றவை தானா என்ற கேள்வி எழுகிறது.
திருவிழாக்களில் கரகம் ஆடும் ஆட்டக்காரர்கள் மற்றும் இசை களைஞர்கள் இடையேயான போட்டி மனப்பான்மை மற்றும் அவர்களுக்கிடையே மலரும் காதல், அந்த காதலில் ஏற்படும் தோல்வி என ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சிறப்பாக பதிவு செய்கிறது ஆட்டக்காரி.
திருவிழாக்கள் ஏன் நடத்தப்படுகிறது, எப்படி நடத்தப்படுகிறது என்பதை விளக்கும் கதை பொம்மையசாமி. சொந்த பந்தங்கள் சந்தித்துக் கொள்ளவும், திருமண வயது பிள்ளைளுக்கு வரன் பார்க்கவும் என நடத்தப்படும் திருவிழாக்ககிளில் கலவரங்களுக்கும் பஞ்சமிருப்பதில்லை என்பதை சொல்வதோடு சாமி கலவரம் நடந்தாலும், தன் சுயநலத்திற்காக திருவிழாவை பயன்படுத்தும் பரமசிவத்தையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என கூறிய விதம் அருமை.
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பெரும் பாதிப்பை விளக்கும் அருமையான கதை காடெனப் படுவது யாதெனில், மழை பொய்த்து ஆறுகள் வறண்டு வெறும் மணலாக காட்சியளிக்கும் இன்றைய காலத்தில் அதற்கான காரணத்தை உரக்க சொல்கிறது இந்த சிறுகதை.
விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாயிக்கு சொந்த சகோதரனே ஆதரவாக இல்லாத சூழலையும் எப்படி விவசாயம் பொய்த்து போன நிலையில் இருக்கும் விவசாயிக்கு குடும்பத்தின் மற்ற நபர்கள் எந்தவகையில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்கள் வழியே விவரிக்கிறது உறவுப் பாலங்கள்.
ஒரு ஊரின் ஒட்டுமொத்த மக்களின் சுகமான தருணங்களிலும் துக்கங்களிலும் என ஒவ்வொரு உணர்வுகளுடனும் ஒரு அங்கமாக விளங்கும் திரையரகிங்கம் இடிக்கப்பட்டு திருமண மண்டப மாக மாற்றப்படும் வேளையில் அதற்காக வருந்தும் ஒரு இளைஞனின் உள்ள குமுறளை பதிவு செய்கிறது கடைசி வசனம்.
அரசு வேலை வாங்குவதையே இலக்காக கொண்டு பல ஆண்டுகளாக போராடும் இளைஞர் களைப் பற்றிய கதை தவம், இதே இலக்கினை அடைய முயலும் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த சிறுகதை. இலஞ்சம் பெறும் பொழுது முன் னெசரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாக சொல்லும் கதை புதுக்கணக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் மன அழுத்தம், வேலை உத்திரவாத மின்மை, நிர்வாகத்திற்கு அடிபணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை என அனைத்து இன்னல் களையும் எதார்த்தமாக சொல்லும் கதை இராஜராஜ சோழன், அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஒருவன் ஒரு கட்டத்தில் அந்த நெருக்கடிக்கு எதிரான செயலை கையில் எடுப்பான் என்பதை உணர்ந்து வகையில் அமைந்த கதாப்பாத்திரம் இராஜ ராஜா சோழன்.
இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் இந்த மண்ணின் கதையை, மக்களின் கதையை, மண்ணின் மனம் மாறாமல் சிறப்பாக தொகுத்து வழங்கி உள்ளது. நீராடிய காலங்கள் மற்றும் பகிர்தளம் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. மொத்தத்தில் அடுத்த தலைமுறைக்கு இந்த தலைமுறையின் வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்த தொகுப்பாக விளங்குகிறது இந்த கதையுதிர்காலம்.
வி.க.சீ.கோமதி
ஈரோடு.
அகவிழி
இலக்கியச் சந்திப்பு – 24
நூலின் பெயர் : “கதையுதிர் காலம்” (சிறுகதைகள்)
ஆசிரியர் : இரா.தங்கப்பாண்டியன்
.
இச்சிறு கதைகள் ஒவ்வொன்றும் படிப்பவர்கள் மனதில் தத்தமது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை திரும்பி பார்க்க வைக்கிறது. சிறுவர் முதல் அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு சம்பவம் குறித்து சுட்டி காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது போல சில கதைகள் உள்ளன.
நகரங்களில் வசிப்பவர்களும் திருவிழா என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். திருவிழா காலங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் அதில் பங்கேற்கும் அணி நபர்களின் மனதில் உள்ள ஏற்ற தாழ்வுகள் பற்றி அறிய முடிகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக நகரங்களில் குடியேறியவர்கள் தங்கள் சொந்த பந்தங்களை சந்திக்க திருவிழாக்கள் ஒரு வாய்ப்பாக உள்ளது. குடும்பத்தினர் ஒன்று கூடும் பொழுது சிலருக்கு அதிக வேலை பளுவையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் அளிப்பதாக தோன்றுகிறது. விவசாயம் மட்டுமே செய்து வருபவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட வில்லை என்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியே இருப்பது போல நினைக்கின்றனர். வேறு பணியில் இருப்பவர்கள் பலர் தங்குவதற்கு சொந்த இடம் இல்லாமலும் நினைக்கும் பொழுது விடுமுறை எடுத்துக்கொண்டு பூர்வீகம் வந்து உறவினர்களுடன் தங்குவதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு தான் உறவை மேம்படுத்த எளிதான வழிகள் உள்ளது என்று தோன்றுகிறது.
ஒரு நபர் தன் ஊரில் இருந்த திரையரங்கம் இடிக்கப்படும் என்ற தகவல் அறிந்த பிறகு அந்த திரையரங்கம் மற்றும் அங்கு நடந்த தன் இளமை கால சம்பவங்களை மனத்திரையில் காண செய்கிறார் ஆசிரியர். கலை குழுவில் பணியாற்றிய பெண் தன்னுடைய காதல் நிறைவேறாத காரணத்தால் தனிமையிலே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வது என்பது எவ்வளவு சிரமம் என்பதை கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காகவும் கல்வி நிறுவனங்கள் பெயர் பெறுவதற்காகவும் அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் சந்திக்க நேரிடும் இன்னல்களையும் இந்த நூல் வழியாக அறிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் மூன்றாம் பாலினமாக பிறக்கும் குழந்தை வளர்ந்த பிறகு தங்களுடைய குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. பிறருடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர் என்பதையும் காமாட்சி சிறுகதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
காடு எனப்படுவது யாதெனில் என்ற கதையில் நம் முன்னோர்கள் இயற்கை சார்ந்து வாழ்ந்த வாழ்வியல் இன்று சிதைக்கப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். மரங்கள் வெட்டப்பட்டது அதில் நடைபெற்ற அரசியல் அனைத்தும் இதன் வழியாக புலப்படுகிறது. மரங்கள் மற்றும் காடுகள் வெட்டிய பிறகு சுற்றுச்சூழல் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் கதை வழியாக கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் மக்கள் இயற்கை வளங்கள் பற்றிய தகவல்கள் அறிவது இது போன்ற கதைகளின் வழியாக மட்டுமே.
பாட்டி மற்றும் தாத்தா கூறிய கதையும் அந்தக் கதைகள் கூறிய விதம் அவரவர் கோணத்தில் மாறுபட்டதையும் கதை உதிர் காலம் சிறப்பாக கூறுகிறது. கதைகளின் வழியாக தங்களுடைய கடந்த காலத்தில் நடந்த வெளியில் சொல்ல முடியாத உண்மைகளை கூறுவதாக உள்ளது. வசதி படைத்தவர்கள் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை தேவைப்படும்போது தகாத உறவில் ஈடுபடச் செய்வது அதனை மறைக்க பிறரை பலிகடா ஆக்குவது எப்படி என்று தோலுரித்துக் காட்டுகிறது.