நூல் வகை : கட்டுரை
தலைப்பு : அறியப்படாத தமிழகம்
ஆசிரியர் : தொ.பரமசிவன்
முதல் பதிப்பு : ஜனவரி 2009
பதிப்பு : காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில். 629 001.
www.kalachuvadu.com
பக்கங்கள் : 136
விலை : ரூ.150/
நூல் வகை : கட்டுரை
தலைப்பு : அறியப்படாத தமிழகம்
ஆசிரியர் : தொ.பரமசிவன்
முதல் பதிப்பு : ஜனவரி 2009
பதிப்பு : காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில். 629 001.
www.kalachuvadu.com
பக்கங்கள் : 136
விலை : ரூ.150/
ப.தி.ராஜேந்தின், மாடம்பாக்கம் சென்னை
முனைவர்.தொ.பரமசிவன் அவர்களின் அறியப் படாத தமிழகம் கட்டுரைத் தொகுப்பு நான் அறிந்திராத தகவல் களஞ்சியமாக உள்ளது.
சமூகத்தின் வேர்களை அலசி ஆராய்ந்து நமது பார்வைக்கு பந்தி வைத்திருக்கக் கூடிய பாங்கு பிரமிக்க வைக்கிறது. செறிவு மிக்க இந்தத் தொகுப்பினை படித்து விட்டு விமர்சனம் எழுத முற்படும்போது எல்லாமே முந்தி நின்றதினால் முடிந்த வரை எழுதத் துணிகிறேன்.
செக்கு மாட்டு சித்தாந்தங்கள் தல ஆய்வுகளுக்கு மட்டுமல்லாது பிற ஆய்வுகளுக்கும் பொறுந்தும் என்பதை உள்ளுர விளாசி உணர்த்துகிறது இந்த ஆய்வு நூல்.
தமிழ் என்ற சொல்லினை ஊர்ப் பெயர்களாகவும், மக்களின் பெயர்களாகவும் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை பட்டிய லிட்டிருப்பது சிறந்த புதிய புரிதலை நல்கியது.
தமிழடி என்ற சொல்லுக்கு ஊர் மன்றம் என்பது பொருள் என்பது சிறப்பு. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை ஆகிய இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு என்று கூறும் ஆசிரியர், நீரினை அமிழ்தம் என்று குறிப்பிட்ட வள்ளுவரின் வரிகளை மேற்கோல் காட்டியுள்ளது பொருத்தமானதாக உள்ளது. மனிதனின் வாழ்க்கை முழுவதும் நீரின் பங்கேற்பு குறித்த பார்வை அலாதியானது. சடங்குகளிலும், வழிபாடுகளிலும் நீர் முன்னிலைப் படுத்தப்படுவதையும், நீர் வேட்கையோடு இறத்தல் என்ற அரிய செய்தியை பதிந்திருப்பதும் வியப் பிற்குரியது.
சமைப்பதற்கு அடுதல் என்று பெயர் என்று துவங்கி, எள் எண்ணெய் தான் ஆதிகாலத்தில் எண்ணை என்றும், 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் கடலை எண்ணெய் பயன்பாட்டிற்கு வந்தது என்ற தகவலும் புதுமையானது.
இரவில் உப்பு என்று சொல்லக் கூடாது, இரவில் மோர் தரக்கூடாது. அப்படியே தரும் நிலை வந்தாலும் பெற்றவர்களிடமிருந்து உப்பை கைமாறாக பெற வேண்டும் என்பது போன்ற பகுதி சார் பழக்கங்களை நினைவு கூர்ந்திருப்பது அருமை.
சதைப்பற்றை சோறு என்று அழைக்கும் சொல் லாடலை கையாண்டிருப்பதும் சிறப்பு. அம்மி, உரளி, ஆட்டுக்கல், திரிகை, உலக்கை, குந்தாணி, தீட்டல், படுவாசி போன்ற உணவு தயாரிப்பதற்கான பழங்கால சாதனங்களை அடுக்கியிருப்பது நல்லதோர் வரலாற்று நினைவூட்டலாக உள்ளது. அதிலும் பூண் போட்ட உலக்கை நான்கு அடி நீளம் என்பதும் ஆய்வு நுணுக்கத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
தனிவீடு வேண்டும் என்பதை வெறி என்று குறிப்பிட்டிருப்பது நகர்ப்புற மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளது. வீட்டுக் கடன் ஒரு வாழ்வியல் சிக்கல் என்பதையும் சேர்த்தே பதிந்திருப்பது நல்லதோர் பார்வையாக உள்ளது.
வளமையின் சின்னம் சங்கு என்ற நம்பிக்கையை கோர்த்திருப்பதும், பெருந்தெய்வம் என்றும் குடிப்படைகள் வணங்கும் சிறுதெய்வங்கள் பற்றியும், அதனை வழிபடும் முறையில் பயன் பாட்டு பொருட்கள் பற்றியும் அழகாக கூறப்பட்டுள்ளது.
மரபு விளையாட்டான பல்லாங்குழி பற்றி விரிவான தகவல்களும், மகப்பேறு இன்மை குறித்த காலந்தொட்டு நிலவுகின்ற கடையெண்ணத்தையும் கச்சிதமாக கையாண்ட விதம் போற்றுதலுக்குரியது.
நீரில், காற்றில், நெருப்பில் நடப்பவர்கள் சித்தர்கள். உடலை உருமாற்றிக் கொள்வது, ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றும் தன்மை கொண்டோர் சித்தர்கள் என்றும், ரசவாதம் செய்யத் தெரிந்தவர்கள் என்றும் சித்தர்களுக்கு வரையரை தரும் வரலாறு சிறப்பு.
அதிகார வேட்கைக்கும், எளிய மக்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடே கறுப்பு சிவப்பு எனும் வண்ணத்தின் சாரம் என்பதை ஆராய்ந் திருக்கும் போக்கு சிறப்பு.
சமூகத்தின் ஆதாரங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பிற்கு விமர்சனம் என்பது கூட திறனாய்வாகி விடுகிறது. ஒரு களம் தான் எதிரில் உள்ளவரை அல்லது வாசகரை வடித்தெடுக்கிறது என்பதற்கு இந்த நூல் ஓர் அத்தாட்சி.
மு காயத்ரி தேவி, அசோக் நகர், சென்னை
அறியப்படாத தமிழகம்ஞ். வேர்களைத் தேடிய பயணம் தமிழன் என்றால் யார்? தமிழகம் என்று எதை குறிப்பிடுகிறார்கள்? தமிழன் மற்றும் தமிழ் நாட்டின் அடையாளத்தை, பூர்வீகத்தை உணர்த்தும் ஒரு நூல் தான் ஆய்வாளர், ஆசிரியர் , அறிஞர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய இந்த ‘அறியப்படாத தமிழகம்’ ஆகும். வேறு மாநிலத்தில் பள்ளிப்படிப்பு படித்ததினால் தாய்மொழியான தமிழை பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது அந்தக் குறை சற்று நீங்கி இருக்கிறது.
சங்ககாலம், பக்தி இயக்க காலம், அதை தொடர்ந்து விசயநகர அரசு காலங்களின் வரலாறு தெரிந்துகொள்ள முடிந்தது. பல புகழ்பெற்ற நூல்கள் யாவை என்று உதாரணத்துக்கு புறநானூறு, பரிபாடல், மலைபடுகடம், தேவாரம் என்று அறிந்து கொண்டேன். தமிழிலக்கியத்தில் புலமை பெற்ற பல அறிஞர்களை, கவிஞர்களை உதாரணத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்று எனக்கு அறிமுகப்படுத்தியது.
தமிழில் நிறைய வார்த்தைகளுக்கு வேர்ச்சொல், உருவான வரலாறு உதாரணத்துக்கு ‘சம்பளம்’ – செய்த வேலைக்கு சம்பா நெல்லும், அளத்தில் எடுத்த உப்பும் கூலியாக கொடுத்தது, ‘மனைவி’ – மனையில் வசிப்பவள், ‘பட்டிமன்றம்’ – சமணர்கள் நடத்திய பட்டிமண்டபம் என்ற நிகழ்வில் உருவாகி இருக்கிறது. இந்த நூலில் சொல்லப்படும் அத்தனை தகவல்களுக்கும் தமிழ் இலக்கியத்திலிருந்து, அகழ்வாராய்ச்சியில் கல்வெட்டுகளிலிருந்து சான்றுகள் தரப்பட்ட உள்ளன. சரஸ்வதியின் முன்னோடியாக சமணர்களின் வாக் தேவி, சமண மதத்தின் இருபத்தி நான்காம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் இறந்த நாளை நாம் நரகாசுரன் அழிந்ததாக தீபாவளி பண்டிகை கொண்டாடு கிறோம், தீபாவளி இந்துக்களின் பண்டிகை என்றும் தமிழர்களின் பண்டிகை திருவாதுரை, ஆடிப் பெருக்கு, பங்குனி உத்திரம், தைப்பூசம், தை பொங்கள் என்று நம் பூர்வீகத்தை புரிய வைத் திருக்கிறது. சித்தர்களின் வரலாறும் அரிய செய்தியாகவே எனக்கு இருந்தது. ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற தலைப்பில் அந்த மூதாட்டி மென்மையாக விஷயத்தை வெளிப்படுத்தின விதத்தில் தமிழர்களின் பண்பாட்டின் ஆழம் புரிகிறது. ‘கருப்பு’ என்று தமிழர்களின் உணர்வு களை முழுமையாக அறிய, முழுமைப்படுத்தும் ஒரு அத்தியாயமாக அமைந்துள்ளது.
தோலின் நிறத்தில் இருக்கும் வேறுபாடுகள், ஆதிக்கம், வெளிப்படுத்தும் விதமாக விவரித்த வரலாறு அருமை. அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் இந்த முயற்சிக்கும், உழைப்புக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த மாதிரி வாய்ப்பு அளித்து, எங்களை மேன்மை படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் ஆசான் திரு. உமர் ஃபாருக் ஐயாவுக்கு என்னுடைய நன்றிகள்.
க. பத்மினி சண்முகம், சென்னை. அறியப்படாத தமிழகம் புத்தக ஆசிரியர் திரு. தொ.பரமசிவன் அவர்களுக்கு என் வணக்கங்கள். “தமிழ்” – தமிழ் என்ற சொல்லிற்க்கு “ழ” அழகு. தமிழ் எனும் சொல் இங்கு ஆசிரியர் குறிப்பிடுவது போல் மொழி, கவிதை போன்றவற்றையும் தாண்டிபல கலைப்புலமை மற்றும் இரசனையுடன் கூடிய பொருளில் போற்றப்படுகின்றது. பக்தி இலக்கிய’ங்களில் தமிழ்’ பாட்டாகவும், ஆண்டால் திருப்பாவையில் முப்பது பாடல்களும் ‘தமிழ் மாலை’யாகவும், சேக்கிழார் சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது என்பதை குறித்து ‘செழும் தமிழ்’ என சைவத்தையும், ‘ அயல் வழக்கு’ என சமணத்தையும் அதாவது சைவ சமணம் இவை இரண்டும் மதமும் தெய்வீக நிலையைச் சார்ந்துள்ளது என்று அழகாக விளக்கப்படுகின்றது. அதேபோல் ‘தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்’ என்று கம்பரும் தமிழின் பெருமையை கடவுள் தந்ந தமிழாக குறிப்பிடு கின்றார். ஒவ்வொரு நூற்றாண்டு காலத்திலும் தமிழை பலவாராக தெய்வத்திற்க்கு ஒப்பாக பேசப்பட்டது. கவிஞர் பாரதி தாசன் தமிழை தாயாகவும்; தெய்வமாகவும் வருணித்தார். மேலூம் நாட்டார் வழக்காறுகளில் தமிழ் செம்மையாகப் பேசப்படும் மொழியாகவும் வழங்கப்பட்டது. ‘தமிழடி’ என்பது ஊரின் ஒரு பொது மன்றத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழங்கப்பட்டது. மேலும் ‘தமிழாக்குறிச்சி’, ‘தமிழ் தரையன்’ என ஊரின் பெயராகவும், மக்களின் பெயராகவும் சூட்டிக் கொள்வதை பல இடங்களில் காண முடிகின்றது. இவ்வாறு சூட்டிக்கொள்வது பெருமைக்குறிய செயலாகக் கருதப்படுகின்றது. முதலாம் ஆதித்த சோழன்தன் வெற்றிக்கு உதவியவர்க்கு தமிழை அடைமொழியாக வைத்து “செம்பியன் தமிழ்வேள்” என்றும், கோயிலாங்குளம் சமண கோயில் கல்வெட்டுக்களிளும் தமிழ் சேர்த்த பல பெயர்களை காண்பதில் பெருமை உண்டாகின்றது. “தண்ணீர்” – இனிமை மற்றும் எளிதில் புழங்கும் தன்மை நீருக்கு உண்டு இதை அடிப்படையாக வைத்து ‘தமிழ்’ மொழிக்கு இனிமையும, நீர்மையும் தமிழ் எனவாகும் என தண்ணீருக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. நீர் என்பது குளிர்ச்சி தன்மை யுள்ளது. வானத்திலிருந்து நீர் வருவதால் திருவள்ளவர் நீரை ‘அமிழ்தம்’ என்று குறிப்பிடுவது சிறப்பாகும். அதேபோல் தமிழில் நீர் நிலைகள் சுனை, பொய்கை, ஊற்று போன்ற இன்னும் பல பெயர்களால் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு தொழிலுக்கும் பயன்பாட்டிற்க்கும் ஏற்ப நீர் நிலைகளை தமிழில் பல சிறப்புப் பெயர்களில் குறிப்பிடம் வழக்கம் உள்ளது. கிணற்றுநீர் உவர்ப்பாக இருந்தால் அதில் நெல்லி மரத்தின் வேர்களை போட்டால் அக்கிணறிறின் நீரானதூ உவர்ப்புத் தன்மைநீங்கி நல்லசுவையுடன் மாறுபடும் அதற்கு ‘நெல்லிக்காய் ஊருணி’ என்று பெயர் வழங்கப்படுகின்றது. சங்கரன் கோவிலுக்கு வடக்கே உள்ள பனையூரில் இறைவனுக்கு “நன்னீர்த் துறையுடைய நாயனார்” என்ற பெயர் அக்கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இன்னும் தமிழர் வீட்டு சடங்குகளில் நீரை பல புனிதமான வகையில் பயன்படுத்தப்படும் வழக்கம் உள்ளது. மொகஞ்சதாரே மற்றும் பல அகழ்வாராய்ச்சி இடங் களிலும் படிகட்டுகள் நீர் நிலைகள் பல இலக்கியச் சான்றுகளுடன் கண்டறியப்பட்டுள்ளது. தமிழில் நீரை மையமாக வைத்து ‘நீரடித்து நீர் விலகாது’ இது போன்று பல பழமொழிகள் வழக்கத்தில் உண்டு எனாபது சிறப்புமிக்கது. தமிழரின் உணவு முறையும் சிறப்பு மிக்கது. தமிழர் வீடுகளில் பெரும்பாலம் சமையலறை வீட்டின் வடகிக்கு அல்லது தென்மேற்க்குத் திசைகளில் தான் அமைந்திருக்கும். உணவு உடல் ஆரோக்கியத்திற்க்கு மிகவும் முக்கியம் என்பதால் சமைத்தல் என்பது பக்குவப்படுத்துதல் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் தமிழர் உணவில் சுமை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. கிழங்கு வகைகளை சுட்டு உண்ணுதல், மாவு வகைகளை நீராவியில் வேகவைத்து உண்ணுதல், சிறுதானியங்கள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், இனிப்பு வகைகள்,காய்கறிகளில் வற்றல், போன்றவையும் தமிழர் உணவுப் பயன்பாட்டில் இருந்தது. தமிழர் முதலில் மிளகைத்தான் (கருங்கறி) காரச்சுவைக்குப் பயன்படுத்தி வந்தனர். இறைச்சியின் காரசுவைக்கு இந்த கருங்கறியைப் பயன் படத்தியதால் இறைச்சியே பின்பு கறி என வழங்கப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் சிலி.நாட்டிலிருந்து மிளகாய் தமிழ் நாட்டிற்க்கு வந்தது. வெள்ளை மிளகான வால் மிளகை தமிழர் குறைவாகவே பயன் படுத்தியுள்ளனர். தமிழர் உணவில் பொறிப்பதற்க்காகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கடலை எண்ணெய் ‘விசயநகர பேரரசு ஆட்சி காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘லாலா மிட்டாய்க்கடை’ தமிழ்நாட்டில் வித விதமான இனிப்பு உணவு வகைகளை அறிமுகப் படுத்தியது. ‘நாயக்க’ மன்னர்கள் காலத்தில் அவர்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்க்கு இந்தி பேசும் மக்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் பல இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது. கருப்பட்டியை மையமாக வைத்து நாடார் பிரிவினர் செய்யும் இனிப்புகடைக்கு “மிட்டாய்க் கடை” என்ற பெயர் வழக்கத்திலுள்ளது. வள்ளரசு நாடுகளின் பொருளான காப்பி, தேநீர், சர்க்கரையும் இன்று தமிழர் புழக்கத்தில் இருக்கின்றது. சமையலின் சரியான சுவைக்கு பயன்படுத்தப்படும் உப்பிற்க்கு ‘வெளுப்பு’ என்று பொருள் வழங்கப் படுகின்றது. தமிழர் உணவில் உப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழியும் தமிழர் வழக்கத்தில் உண்டு. பழந்தமிழ்நாட்டின் சந்தை உற்ப்பத்திப் பொருளாக ‘உப்பு’ விளங்குகின்றது. உப்பு வளையும் களத்திற்க்கு ‘அளம்’என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் காந்தியடிகளின் “உப்பு சத்தியாகிரகம்,தண்டியாத்திரை இவை இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தவையாகும். ‘உணவும் நம்பிக்கையும்’ என்ற தலைப்பில் கடவுள் வழிபாடுகளிலூம், தமிழ் மாதங்களை அடிப்படை யாக வைத்தும் உணவு சமைத்த அந்தந்த கடவுளுக்கு படைத்தளும் தமிழர் பன்பாட்டில் வழக்கத்தில் இருந்துள்ளது.எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெயும், பாலில் இருந்து பெறப்பட்ட நெய்பும் தமிளர் பயன்பாட்டில் இருக்கின்றது. தலை மற்றும் உடலில் எண்ணெய் தேய்க்கும் வழக்கமும் பயன்பாட்டில் உள்ளது. அரசியல் அதிகாரிகளே கல் செக்கு அமைக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். அடுத்து நெல்லரிசி சோறு மட்டுமே சோறு என்ற பெயரில் வழங்கப்படுகின்றது. கம்பு, சோளம், குதிரைவாலி போன்றவை தானிய வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. ‘பெருஞ்சோறு’ என்னும் சொல் அரசன் போருக்குச் செல்லும் முன் வீரர் அனைவரோடும் சேர்ந்து உண்டதைக் குறிப்பதாகும். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உணவு காசுக்கு விற்க்கும் கடைகள் உருவாகின. சங்க இலக்கியத்தில் ‘இரவலர்’ என்ற சொல் கலைஞர்களை குறிக்கவே வந்ததாகக் கூறப்படு கின்றது. பிச்சையெடுத்தல் என்ற சொல் தமிழ் நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் சமணமதத் துறவிகள் மூலமாகவே பரவியிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. ‘பிட்சை என்ற வடசொல்லிற்க்கு பதிலாக இரத்தல்’ என்ற தமிழ்ச்… Read more »
மு. லோககவிதா, கோயம்புத்தூர்
* அறியப்படாத தமிழகம் * இந்நூலில் பரமசிவம் அவர்களின் கருத்துக்களும் மேற் கோள்களும் அவர்களின் இலக்கிய அறிவும் இதில் மேலோங்கி நிற்கிறது. அறியப் படாத தமிழகம் தலைப்பிற்கு ஏற்ப நாம் அறியாதுபழந்தமிழகத்தின் வரலாற்றை சிறுசிறு செய்திகளாக விளக்கியுள்ளார்.
அக்காலத் தமிழர்கள் சாப்பாடு தண்ணீர் போன்றவையே விற்பனைக்கு இல்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். ஒருவர் தங்களது ஊருக்கு வந்து சாப்பாடு இல்லாமல் கஷ்டப் பட்டால் அது அவர்களது மானப் பிரச்சனையாக கருதினர் ஆனால் இன்றோ அந்நிலை மாறிவிட்டது.
அம்மி, குழவி, ஆட்டுக்கல், திருகு, உலக்கை போன்ற கல் உலோகங்கள் எல்லாம் கற்காலத்தில் தோன்றியதாக கூறியுள்ளனர் ஆனால் அது இன்றுவரை நமது நம்மிடத்தில் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது.
அக்கால மக்கள் உறவுப்பெயர்கள் எப்படி பெயர் வைத்துள்ளனர் என்பதை மிகவும் அருமையாக விளக்கங்களுடன் கூறியுள்ளார். அதேபோல் மக்கட் பெயர்களும் மிகவும் ஆழ்ந்த கருத்துள்ள பெயர்களை வைத்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
தாய்மாமன் என்கிற உறவு தலைசிறந்ததாக அந்நாள் முதல் இந்நாள் வரை சொல்லப்பட்டு வருகிறது. அது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று எண்ணியிருந்தேன் ஆனால் இந்த நூலைப் படித்த பிறகுதான் தெரிந்தது ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இதை தாய்மாமன் முறைக்கு முக்கியத்துவம் தருவது தெரிய வந்துள்ளது. பெண்ணின் சொத்துரிமையை ஈடு செய்வதற்காக தாய்மாமன் சீர் செய்கிறார் என்ற கருத்து விளங்கியது.
தாலியும் மஞ்சளும் பற்றிய அவர் சொல்கையில் பழந்தமிழர்கள் திருமணத்தின்போது தாலி அணியவில்லை என்பதை ஒரு சில மேற்கோள்கள் காட்டி விளக்கியுள்ளார் ஆனால் பிறந்த குழந்தை களுக்கு ஐம்படைத்தாலி அணிந்து உள்ளதாக வரலாறு கூறுகிறது என்று ?றியுள்ளார். கிபி ஏழாம் நூற்றாண்டில் ஆண்டாள் பாடிய திருமண சடங்குகளை பற்றி பாடலில் தாலி என்பது இடம்பெறவில்லை என்பதை மேற்கோள்காட்டி கூறியிருக்கிறார்.
கி.பி.பத்தாம் நாற்றாண்டிற்கு பின்புதான் கழுத்து தாலி என்பது அறிமுகப்படுத்த புனிதப் பொருளாக பார்க்கப்பட்டுள்ளது அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாவை நோன்பு பற்றி விளக்கமாக கூறியுள்ளதை மேற்கோள் காட்டி யுள்ளார் பாவை நோன்பு மார்கழி மாத பௌர்ணமி நாளில் ஆரம்பித்து தை மாத பௌர்ணமியில் முடிகிறது அந்த ஒரு மாதமும் நோன்பு மேற்கொள்கிறார்கள் தை மாத பவுர்ணமி தைப்பூசம் தமிழர்களிடையே தைப்பூசம் திருவாதிரை, கார்த்திகை பெரிய திருவிழாவாக இருந்துள்ளது தீபாவளி தீபாவளி தமிழர்களின் தேசியத் திருவிழாவாக காட்டப்படுகிறது. இருந்தாலும் தைத் திருநாள் ஆகிய தைப்பொங்கலை நாம் பல காலமாக திருவிழாவாக கொண்டாடிவந்து கொண்டிருக் கிறோம். இதுவே நமது அடையாளமாக இருந் திருக்கிறது.
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்துள்ளது பெரும்பாலும் வணிகர்களே விநாயகர் வழிபாட்டில் அதிகம் ஈடு பட்டுள்ளதாக இந்நூல் கூறுகிறது.
தமிழகத்தில் கிபி 14ம் நூற்றாண்டில் துலுக்க நாச்சியார், ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் வழிபாடு நிகழ்ந்திருக்கிறது என்பதன்.. மூலம் தமிழகத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. பல்லாங்குழி சிறு வயதில் விளையாடிருக் கிறேன். அதற்கு இத்தனை அர்த்தங்களா என எண்ணும் அளவிற்கு இருந்தது அவரது விளக்கம்.
இந்நூல் பழங்காலத்தமிழர்களின் வரலாற்றுத் தகவல் களஞ்சியமாக இருந்தது. சங்க இலக்கியம் முதல் இக்கால ஆய்வு நூல் வரை திறண் பெற்ற ஆசிரியரின் நூலுக்கு விமர்சணம் எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.
டைபெற்றது பன்னெடுங்காலமாக உள்ளது என்பதை தவிடும் தத்தும் பகுதியில் புரிந்து கொள்ள முடிகிறது. இறந்தவர்கள் சடங்குகள் நடைபெறும் போது பலவகையான செய்திகளை சிறு அசைவுகளின் மூலமாகவே அனைவருக்கும் அறிவிப்பது மதிநுட்பம் கொண்ட செயல்பாடாகும்.
சமண மதம் கல்விக்கு தொண்டாற்றியதையும் பள்ளி என்ற சொல்லுக்கு பின் உள்ள வரலாற்று செய்தியையும் அறிய முடிகிறது. பாகுபாடு இல்லாமல் கல்வி கற்று கொடுக்கப்பட்டது என்பதும் சிறப்பான பணியாகும்.
சித்தர்கள் பற்றிய குறிப்பில் மக்களிடம் அவர்கள் மரியாதைக்குரியவர்களாக விலகியதற்கான காரணம் புரிந்தது அவர்களின் பற்று இல்லாத வாழ்வையும் மருத்துவ அறிவையும் குறிப்பிட்டுள்ளதை காணும்பொழுது சித்தர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்வம் மற்றும் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உலகம் நிலையில்லாதது என்ற புரிதலில் வாழ்ந்ததால் தான் அவர்கள் மக்களுக்கு சிறப்பான பணிகளை செய்யும் வாய்ப்பு பெற்றார்களோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.
குற்றங்களாக கருதப்பட்ட பொய் களவு கொலை காமம் கள் ஆகிய ஐந்திலும் தொடர்புடையவர்களே இன்று அதிகாரப் பதவியில் உள்ளனர் என்பது இன்றைய நிலையில் நம் நாட்டு மக்களுக்கு சாபக்கேடு போன்று அமைந்துள்ளது.எந்த நிலை ஏற்பட்டதாலும் வாக்குறுதிகளை காப்பாற்றும் தகுதி அற்ற ஒருவன் வாழும் இடத்தில் மழை பெய்யாது இயற்கை தண்டிக்கும் என்றால்… பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் கூட்டம் அதிகமாகி வருகிற தற்போது உள்ள சூழலில் மழை பெய்யாது இயற்கை தண்டனை அளிக்க துவங்கிவிட்டது என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.
இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் சான்றுகளை எடுத்துக்கூறி ஒவ்வொரு பகுதியையும் விளக்கிய விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த நூலினை வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் தமிழ்நாட்டு வரலாற்றை தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இந்நூலில் உள்ள கருத்துக்களை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது ஆனாலும் விமர்சனம் பதிவிடுவது சற்று கடினமாக இருந்தது. எதைப்பற்றி கருத்து கூறுவது எதை தவிர்ப்பது. என்பதில் தான் சிரமமாக இருந்தது. தங்களின் படைப்புகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
வி. க. சீ . கோமதி.
ஈரோடு.
அகவிழி இணையவழி இலக்கிய சந்திப்பு – 13
” அறியப்படாத தமிழகம்”
அறியப்படாத தமிழகம் என்னும் நூலை உருவாக்கிய உங்களுக்கு மிக்க நன்றி. இந்த நூல் தமிழ்மக்களின் உணவு உண்ணும் முறை வாழ்விடம் உறவுகள் அரசியல் மதங்கள் சாதிகள் உருவாக்கப்பட்ட விதம் பிற மாநிலத்தவர் இங்கு எப்பொழுது வந்தனர் மக்கள் தங்கள் நிறங்களின் வாயிலாக எந்த வகையில் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர் பழங்கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகள் அரசர்கள் காலத்தில் அளிக்கப்பட்ட பரிசுகள் மற்றும் தண்டனைகள் என்று தங்களின் ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான விளக்கங்களை படிக்க படிக்க பிரமிப்பாக உள்ளது. இந்த நூலை எழுதி வெளியிட்ட நாட்களில் தங்களுக்கு தேவையான கருத்து சேகரித்தல் மற்றும் அது தொடர்பான ஆய்வு பயணங்கள் எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது.
தத்துவ போர் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியில் “இப்பொழுது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமது அறிவுள்ள முன்னோடிகள் இப்படி எல்லாம் வந்து இருக்கிறார்கள் “என்று எழுதியதைப் படித்தவுடன் இன்றைய கல்விக் கொள்கை வெளிவந்திருப்பதும் அதனைப்பற்றி அஞ்சி கற்று தேர்ந்த எவரும் எந்த கருத்துக்களையும் பேசாமல் இருப்பதையும் ஒப்பிட்டு எதிர்கால தலைமுறையினர் இதுபோன்றதொரு கருத்துக்களை இன்று வாழும் மக்களை பற்றி பேச வேண்டிய சூழ்நிலை உருவாகி விடக் கூடாது என்று தோன்றுகிறது. அதற்கான கருத்துக்களை முன்வைத்து போராடும் நம் தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கருத்துக்களை அனைத்து தரப்பினரும் உணர்வதற்கான சூழ்நிலை ஏற்பட வேண்டும் அதன் விளைவாக நம் எதிர்கால சந்ததியினர் பயன்பெற்று முன்னேற்றம் காண வேண்டும். பிற்போக்கு சிந்தனைகள் கொண்டு மக்களுக்கு தீங்கிழைக்கும் மதவாத அரசியல் அமைப்புக்கள் அழியும் நிலை ஏற்பட வேண்டும்.
தமிழர்களின் உணவு உண்ணும் முறை உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் வருகை மனிதர்கள் மற்றும் தெய்வங்களுக்கான உணவு பற்றிய குறிப்புகள் பிச்சை எடுத்தல் ஆகிய அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உரல் உலக்கை அம்மி குந்தாணி போன்றவை பற்றிய தகவல்கள் எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் விதமாகவும் அவை பயன்படுத்தப்படும் விதத்தைப் பற்றியும் அருமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர் பாரம்பரியம் பற்றிய புரிதல் இதனை படிப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உள்ளது.
தமிழை தாயாகவும் தெய்வமாக போராட்ட கருவியாகவும் கொண்டது தமிழ்நாடு என்பது அன்றைய வரலாற்றுச் செய்தியாக படிக்கும் போது இன்றைய கல்வி உரிமையை காப்பதற்காக போராடும் நம் தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இன்று விழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்து உரிமை போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் பாராட்டப்பட /போற்றப்பட வேண்டியதாகும்.
தமிழர்கள் நீர்நிலைகளை பாதுகாக்கவும் அதனை பயன்படுத்தவும் நீர்நிலைகளுக்கு பல வகையான பெயரிட்டு அழைத்தனர் என்பதை இந்த நூல் படிப்பவர்கள் மனதில் ஆச்சரியம் கலந்த புரிதலை ஏற்படுத்துவதாக உள்ளது. உப்பு தமிழர்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதையும் மிகப்பெரிய சந்தைப்படுத்தும் பொருளாக பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே கிணறுகளை அமைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசர்கள் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளனர் என்பதை விளக்குகிறது. தமிழர்களின் உடை நாகரீகம் விஜயநகர பேரரசர்கள் மற்றும் தெலுங்கு மக்களின் தமிழக வருகைக்கு பின்னரே மாறியுள்ளது என்பதை சான்றுகளுடன் புரிந்துகொள்ள முடிந்தது. பாய் நெசவு நெய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தொழில் திறமை மிக்கவர்களாக உள்ளனர் என்பது பாராட்டப்பட வேண்டியதாகும். பெயர் சூட்டுவதில் தங்களின் ஆசைகள் கடந்த கால நினைவுகள் மற்றும் நம்பிக்கையும் வழக்கமாக இருந்ததை அறிய முடிந்தது. சமண பௌத்த பெயர்கள் கடவுளின் பெயர்கள் கிருத்துவம் ஆங்கிலமும் கலந்து ஏற்படுத்திய புதிய தமிழ் பெயர் கள் என பெயரிடும் மரபு வேடிக்கையாக உள்ளது. இதிலும் சிறுதெய்வ பெயர்களை அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே வழங்கப்பெறும் என்றும் ராஜா போன்ற பெயர்களை அவர்கள் பெயரிட முடியாதவாறு ஒடுக்குமுறை நிலவியது பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. சாதியை குறிக்கும் பாகுபாடு என்பது பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அண்ணன் தங்கை உறவில் பெண்ணின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றவேண்டிய கட்டாய சூழல் ஆண் மகனுக்கு உருவாக்கப்படுகிறது உள்ளது. பெண்கள் தங்கள் சொத்து உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இதுபோன்ற கடமைகளை தங்கள் சகோதரர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
சொத்துக்குரிய ஆண் வாரிசுகள் இல்லாத காரணத்தினால் கூட குழந்தைகளை தத்து எடுத்தல் ந