அறிமுகம்

நூலரங்கம் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். .

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளையின் முயற்சியால் துவங்கப்பட்டுள்ள நூலரங்கம் – நூல் மதிப்பீட்டிற்கான தமிழின் முதல் இணையதளம் ஆகும். திரைப்படங்களுக்கான மதிப்பீட்டு இணையத்தளங்கள் நூற்றுக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் போது தமிழில் வெளியாகும் நூல்களுக்கென்றே தனியான மதிப்பீட்டு இணையதளம் ஒன்று கூட இல்லை. ஒரே நூலுக்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள் மதிப்புரை எழுதும் வகையில் நூலரங்கம் இணையத்தை துவங்கலாம் என்று தமுஎகச, அறம் கிளை நிர்வாகக் குழு இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இத்தளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள நூல்களுக்கு வாசகர்கள் யார் வேண்டுமானாலும் கருத்துப் பெட்டியின் வழியாக நேரடியாக மதிப்புரையைப் பதிவு செய்யலாம். தளத்தில் இல்லாத நூல்களுக்கு மதிப்புரை எழுத விரும்பும் தோழர்கள் contact@noolarangam.comமின்னஞ்சல் முகவரிக்கு நூல் குறித்த தகவல்களை அனுப்பினால் உடனடியாக நூல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு கருத்துகளைப் பதிவிடலாம். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் யார் வேண்டுமானாலும் நூல்கள் குறித்த விவரங்களை அட்டைப்படத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

தமிழ் நூல்களின் மதிப்பினை உலகமறியச் செய்ய ஒன்றிணைவோம். . .

Pin It on Pinterest

Share This